குருபகவான்" இருக்கும் பாவத்தை எப்படி நமக்காக "possitive"ஆக மாற்றுவது என்பது
ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் நவசக்தி ஜோதிட உலகத்தில் இருக்கும் மிக மிக முக்கியமான கிரகமாகிய "குருபகவான்" இருக்கும் பாவத்தை எப்படி நமக்காக "possitive"ஆக மாற்றுவது என்பது இந்தப் பதிவில் பார்க்கலாம். ★நமது ஜாதகத்தில் குரு பகவான் எந்த பாவத்தில் இருந்தாலும் சரி அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து இருந்தாலும் சரி அந்த பாவம் சார்ந்த விஷயத்தையும் அந்த கிரக காரகத்துவம் சார்ந்த விஷயத்தையும் என்றைக்குமே நம்மால் நம் சுயநலத்திற்காக அனுபவிக்க குருபகவான் விடமாட்டார். ★குரு இருக்கும் பாவம் சார்ந்த விஷயங்களை நாம் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு குரு எந்த பாவத்தில் இருக்கிறதோ அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்தும் அந்த கிரக காரகத்துவம் சார்ந்தும் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அடுத்தவர்களுக்கு உதவி செய்கிறோமோ அதனுடைய reflection ஆகத்தான் அந்த பாவம் சார்ந்து நம்மால் அனுபவிக்க முடியும். ★அதாவது குரு எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயங்களை நாம் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் மற்றும் நன்மை செய்ய வேண்டும் அப்படி செய்தால் அதன் மூலமாக நம்மால் அந்த பாவம் சார்ந்...