இடுகைகள்

சஷ்டாஷ்டக தோஷம் என்றால் (கணவன் மனைவியிடையே ஒற்றுமையின்றி அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படுதல், தற்காலிகய பிரிவுகள் அவ்வப்போது ஏற்படுதல்)

 சஷ்டாஷ்டக தோஷம் என்றால் என்ன...? சஷ்டாஷ்டக தோஷம் என்றால் (கணவன் மனைவியிடையே ஒற்றுமையின்றி அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படுதல், தற்காலிகய பிரிவுகள் அவ்வப்போது ஏற்படுதல்) இதை மனைவியின் ராசியில் இருந்துதான் பார்க்க வேண்டும் என்பதை முதலில் தெளிவு படுத்தி கொள்ளுங்கள். மனைவியின் ஜனன கால ராசியிலிருந்து கணவனின் ஜனனகால ராசியானது ஆறாவது ராசியாகவும், கணவனின் ராசியிலிருந்து மனைவியின் ராசியானது எட்டாவது ராசியாகவும் அமைந்தால், அதுவே சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். அர்த்தமாகியாதா...!!.. ஒரு வேளை அப்படி  இருந்தால் என்ன செய்வது என கேட்கும் அன்பர்களுக்கு , இதோ ஒரு எளிய பரிகாரம். ஆயுட்காலம் முழுவதும்  மனைவி வெள்ளிக்கிழமை தோறும் உபவாசம் இருந்து வந்தால் , இந்த தோஷத்தின் தாக்கம் பெரியதாக இருக்காது. வெள்ளிக்கிழமை கணவன் அசைவ உணவை தவிர்க்க வேண்டும். மேலும்  ஷஷ்டாஷ்டக தோஷத்தில்...... அனுகூல ஷஷ்டாஷ்டகம்,  பிரதிகூல ஷஷ்டாஷ்டகம் என்று உண்டு. மேஷத்திற்கு கன்னியும், தனுசுக்கு ரிஷபமும், துலாத்துக்கு மீனமும் கும்பத்துக்கு கடகமும், சிம்மத்துக்கு மகரமும் மிதுனத்துக்கு விரிச்சிகமும் அனுகூல ஷஷ்டாஷ்டகம்...!...

செய்யும் எந்த தவறுகளையும் எவராலும் கண்டுபிடிக்க முடியாது

  1+ 6 + 12 = என்ன பலன் ..??...!!! ஒருவருடைய ஜாதகத்தில்  எதனையும் தீர்மானிப்பது  லக்கினாதிபதி தான் என்பதை மனதில் கொள்க... ஒருவருக்கு லக்கினாதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும்...அது ரொம்ப ரொம்ப முக்கியம்.. சரி பதிவின் தலைப்புக்கும் லக்னத்துக்கும் என்ன சம்பந்தம்..? ஒருவருக்கு லக்கினாதிபதி நல்ல நிலையில் இருந்து ஆறாம் வீட்டு அதிபதியும் நல்ல நிலையில் இருந்தால் அவன் செய்யும் எந்த தவறுகளையும்  எவராலும் கண்டுபிடிக்க முடியாது. போதை பொருள் கடத்தல் கும்பல், கொலை , கொள்ளை , கள்ள காதல், கற்பழிப்பு இன்னும் பிற வெளியே சொல்ல முடியாத இத்யாதி  விஷயங்களில்  ஈடுபடும் நபர்கள் யாருக்கும் மாட்டாமல் தப்பித்து கொள்வது இந்த ஜாதக அமைப்புகளால் தான்.. ஒரு அயோக்கியன்  யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் வெளியே சுததிரமாக சுற்றி திரிகிறான் என்றால்  அவனுடைய ஜாதகத்தில்  லக்கினாதிபதி மற்றும் ஆறாம் வீட்டு அதிபருடன் பனிரெண்டாம் வீட்டு அதிபரும் கூட்டணி வைத்து இருப்பார். ஆராய்ந்து  பாருங்கள்....பலன் சரியாக வரும்...

தவிர்ப்பவர்களுக்கு பிதுர் தோஷம் வரும் ஏன்

 காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு பிதுர் தோஷம் வரும் ஏன்? காலை உணவிற்கான நேரம் காலை 8:00-10:00 ராசிபுரத்தில் காலை 08:00 மணி முதல் 10:00 மணிக்குட்பட்ட காலம் என்பது உணவு காரகன் சந்திரனும் பெருந்தீனி காரகன் ராகுவும் உச்சம் பெறும் ரிஷப ராசிக்குரிய காலம் ஆகும். எனவே இந்த நேரத்தில் தான் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துள்ள உணவை அதிகம் உட்கொள்ள வேண்டும் காலை வேளையில் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பது இயற்கையான உடலியல் அமைப்பு.🐉 உணவுக்கும் உடலில் உள்ள ஜீரண நொதிகளுக்கும் இரைப்பைக்கும் காரகம் பெற்றவர் சந்திரன் பிதுர்களுக்கு காரகம் பெற்றவர் ராகு. எனவே ஒரு மனிதன் காலை வேளையில் உணவை உண்ணாமல் தொடர்ந்து தவிர்த்து வரும் வழக்கத்தை செய்தால் அவனது சந்திர காரகமும் ராகு காரகமும் ஏங்கி தவிக்க ஆரம்பிக்கும். அதாவது வயிறு ஜீரண நொதிகள் அனைத்தும் அந்த காலை 08:00-10:00 வேளையில் ஆவலோடு உணவை எதிர்பார்த்து காத்திருக்கும். இந்த ஏக்கம் நிறைவேறாமல் போகும் அவஸ்தை என்பது ராகுவின் பித்ருக்கள் உணவின்றி பட்டினி கிடந்து தவிப்பதாக பொருள் படும்.🐉 இளமையில் இது தெரியாது 40 வயதிற்கு மேல் பிற்காலத்தில் நாம் சாப்பிடலாம் என...

சாதகருக்கு கிடைக்கும் சொத்து விபரம் 1

சாதகருக்கு கிடைக்கும் சொத்து விபரம் 1) ஒன்றோன் + மூன்றோன் பலத்துடன் சேர்ந்து சூரியன், குரு, செவ்வாய் உடன் சேர்ந்தால் அண்ணன், தாய், மாமா இவர்களின் சொத்து கிடைக்கும். 2) நட்பு வீட்டில் மூன்றோன் + ஒன்பதோன் அண்ணன் சொத்து கிடைக்கும். 3) சந்திர லக்கினத்திற்குப் பத்தோன் ஆகிய கிரகத்தினால் சொத்து - சூரியன் - தந்தை ; சந்திரன் - தாய் ; செவ்வாய் - தனது ; புதன் - பகைவர் ; குரு - நண்பர் ; சுக்கிரன் - மனைவி ; சனி - அடிமையர் சொத்து கிடைக்கும். 4) பதினொன்றோன் + ஒன்பதோன் கூடினால் - பழைய தனம்.  5) மூன்றோன் பலத்து ; லக்கினாதிபதி பலமின்றி 3 (அ) 11-ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்தால் உடன் பிறந்தோர்களின் சொத்து கிடைக்கும். 6) 6-ல் 11-ஆம் அதிபதி இருந்தால் மாமாவின் சொத்து கிடைக்கும். 7) 11-ஆம் அதிபதி குருவாகி 6-ல் இருந்தால் மாமியாரின் சொத்து கிடைக்கும். 8) 9-ல் 5-ஆம் அதிபதி சுபனாகி இருந்தால் மருமகள் வகையில் பொருள் கிடைக்கும். 9) த்தோன் குருவாகி இவருடன் இணைந்த கிரகம் சூரியன் - தந்தை ; சந்திரன் - தாய் ; செவ்வாய் - பகைவர் ; புதன் - நான்பர்கள் ; குரு - புத்திரர்கள்  சுக்கிரன் - களத்திரம்; சனி - கருத்தோர் ; ரா...

சரி ருத்ராட்சத்தை அணிந்து கொண்டேன், இதன் பலன்கள் தான் என்ன?

 சரி ருத்ராட்சத்தை அணிந்து கொண்டேன், இதன் பலன்கள் தான் என்ன? --------------------------------------------- நீராடும் போது ருத்ராட்சம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.  பாவங்களினால் தான் நமக்குக் கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்சம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும். மேலும் ருத்ராட்சம் அணிபவருக்கு லஷ்மி கடாட்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும் என்று சிவ மகா புராணம் அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க. இது மட்டுமல்ல ருத்ராட்சம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன.  எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்சத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் கண்டிப்...

வர்கோத்தமம்

 வர்க்கோத்தமம் - பலன் என்ன..? ---------------------------------------------------  வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்! ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்! ராசி கட்டத்தில் சிம்மத்தில் சூரியன் இருந்து, அம்சத்திலும் சிம்மத்தில் சூரியன் இருந்தால் அதற்கு வர்கோத்தம சூரியன் என்று பெயர். சிம்மத்திற்கு சூரியன் யோககாரகன். அவன் வர்கோத்தமமும் பெற்றால் ஜாதகனுக்கு இரட்டிப்பு யோகங்களைக் கொடுப்பார். நல்ல பலன்களைக் கொடுப்பார். அப்படி வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும். லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான். சூரியன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்குத் தலைமை ஏற்கும் தகுதியைக் கொடுக்கும். சந்திரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத மன வலிமையைக் கொடுக்கும். எதையும் சட்...

கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.

 ருத்ராட்ஷம் அணிவதால்  கடவுளின்  கருணை  கிட்டுமா? --------------------------------------------- -------------- சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தால் வணங்கி அவர் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும்.  அப்படியிருக்க அவர் ருத்ராட்ஷத்தையே நமக்கு அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சர மந்திரமான "ஓம் நமசிவாய" உச்சரித்தல், இம்மூன்றும் ஒரு சேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை அடைவீர்.  தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார். மேலும் நவகிரஹங்கள் நன்மையே செய்யும், (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ராகு-கேது) தோஷத்தின் தாக்கங்கள் குறையும். ருத்ராட்ஷம் அணிந்திருக்கும் வேலையில் உயிர் பிரிந்தால் சிவபெருமான் திருவடியை அடைந்து நற்கதி எற்படும். பேய், பிசாசு, பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம், இவை அனைத்தும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது.  ஆகையால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஒருவர் ஏழுஜென்மங்கள் தொடர்ந்து புன்னியம் செய்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்ஷம் அண...