அங்கிசம் என்றால் என்ன ? அதன் அர்த்தம் என்ன ?
அங்கிசம் என்றால் என்ன ? அதன் அர்த்தம் என்ன ? அங்கிசம் என்பதன் அர்த்தம் ; தோள் கொடுத்தல் , கூறு , பங்கு , வாழையடி வாழையாய் வளர வேண்டிய வம்சம் என்று அர்த்தம் கொள்ளலாம் . ஒரு நட்சத்திரத்துக்கு ஒருவர் அதிபதியாக இருக்கும் போது , இன்னொருவர் அந்த நட்சத்திரத்தை தோள்கொடுத்து தூக்கி நிறுத்த முடியும் என்பதைக் காட்டுவதே அங்கிசம் என்பதாக நினைக்கிறேன் . இப்போது குருவின் நட்சத்திரம் விசாகத்திற்கு சுக்கிரன் அங்கிசைநாதனாக வருகிறார் . குரு எனும் கிரகம் சாரம் தருவதின் மூலம் இயக்கு சக்தியாக இருக்க , சுக்கிரன் அங்கிச நாதனாகி இயங்கு சக்தியாக இருப்பார் . விசாகம் சாரம் பெறும் எந்தகிரகத்திற்கும் சாரநாதனும் , அங்கிசைநாதனும் பலம்பெற்று இருந்தால்தான் முழுமையான பலன்கள் கிட்டும் . தமிழ்மொழியில் இயற்றப்பட்ட மூத்த பழமையான ஜோதிட நூலான , " ஜாதக அலங்காரம் " என்கிற நூலில் அங்கிசப் பலனறியும் முறையினை தந்துள்ளார்கள் . நாம் முன்பு கண்ட , " தசவர்க்கமும் , அங்கிசப் பலன் அறிதலும் " என்கிற கட்டுரையில் கண்டதைப்போல , இதுவும் ஒருவழியாகும் . இதுவும் மிகவும் நுட்பமான விடயம்தான் . ஆனால் , அதிகம் பயன்படுத்தாத , ...