இடுகைகள்

முயற்சி என்ன என்று மூன்றாம் பாவத்தில் மட்டும் தேட வேண்டாம் ஒவ்வொரு பாவத்தின் செயலுக்கும் அதற்கு மூன்றாம் பாவத்தில் தேடுங்கள்.

முயற்சி என்ன என்று மூன்றாம் பாவத்தில் மட்டும் தேட வேண்டாம் ஒவ்வொரு பாவத்தின் செயலுக்கும் அதற்கு மூன்றாம் பாவத்தில் தேடுங்கள்.

துலா ராசி..துலா லக்கனத்தில் பிறந்தவர்கள் அனைவருக்கும்

 ஊருக்கு நீதி சொல்லியும் உபதேசம்                     செய்து வாழ்ந்தும்   உறவுகளுக்கு உண்மையாக நடந்தும்   வாழ்ந்தும் நீதி நேர்மை தர்மம் என்று      அனைத்தையும் கடைபிடித்தும் கூட           தன்னுடைய குடும்ப வாழ்க்கை மற்றும் பொருளாதார ரீதியாக கோட்டை விடும் ராசியினர் துலா ராசியினர்தான்                         மிக அதிகம்.!        காரணம் இந்த ராசியில் நீதிமான்          சனி பகவான் உச்சம்பெறுகிற     காரணமாக இவர்களால் அவ்வளவு             சீக்கிரத்தில் தன்னுடைய      மனதை மாற்றி அடுத்தவர்களின்      வாழ்வாதாரத்தை திருடி பிழைக்க                        மாட்டார்கள்..!  கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே         என்பதற்கு இனங...

ஷட்பஞ்சசிகா ஸ்லோகம்-3 சுபர் மற்றும் பாவர்

ஷட்பஞ்சசிகா ஸ்லோகம்-3 பாவ அதிபதிகளாலும் சுபர்களாலும் பார்க்கப்படும் மற்றும் அவர்கள் இருக்கும் பாவங்கள் விருத்தி-வளம்-பாக்கியம்-பெருக்கம் அடையும். அசுபர்கள் அவ்வாறு பார்த்தாலும் அல்லது இருந்தாலும் அந்த பாவகத்துக்கு தீங்கு விளைவிக்கின்றன. இந்த விதி ப்ரச்னத்துக்கும் பிறப்பு ஜாதகத்துக்கும் பொருந்தும். ஷட்பஞ்சசிகா ஸ்லோகம் 3ன் விளக்கம். வராக மிகிரர் தனது பிருஹத் ஜாதகத்தில் ஒரு பாவமானது அதில் உள்ள கோள்களுக்கு நட்பு வீடாகவோ ஆட்சி வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருக்கும் பட்சத்தில் அந்த பாவம் விருத்தி அடைகிறது. அதேபோல் பகைவீடாகவோ பகைக்கோளாக அல்லதோ நட்பு இல்லாதவனின் வீடாக இருக்கும் பட்சத்தில் அந்த பாவத்துக்கு நாசமோ விருத்தியோ உண்டாகாமல் நடுநிலை பலன் ஏற்படும் என்கிறார். கல்யாணவர்மர் தனது சாராவளியில் கூறுவது. ராசியில் ஆட்சி பெறுங்கோள் அல்லது அதன் நட்புக் கோள்கள் பார்த்தாலும் நின்றாலும ஒரு ராசி/பாவகம் வலிமை பெறுகிறது. இதேபோல் சுபர்களான புதன் மற்றும் குரு இருந்தாலும் பார்த்தாலும் மேற்படி பலனேயாகும். ஆனால் மற்ற கோள்களுக்கு மேற்படி பலன் கிடையாது. இங்குதான் ஒரு கேள்வி எழுகிறது. எவை சுப...

குழந்தை பேறு தடை, மலடு, கர்ப பை

சூரியன் மற்றும் செவ்வாய்க்கு இடையே உள்ள சுக்ரன் மலட்டு தன்மையை ஏற்படுத்துகிறது. இரு உஷ்ண கிரகத்திற்கு இடையே சுக்கிரன் இருந்தால் குழந்தை பேறில் பிரச்சினை ஏற்படுகிறது. பெண்களுக்கு சந்திரன் கெட்டு இருந்தால் கர்ப்பபை பையில் பிரச்சினை ஏற்படுகிறது
சனியின் காரகத்துவங்கள்: சனிக்கு எவ்வளவோ காரகத்துவங்கள் உள்ளன. அத்தனையும் தீயகாரகத்துவங்கள்தான். பிறப்பற்ற இந்த வாழ்விற்கு தேவையற்ற நீண்ட ஆயுளை தந்து மனிதனை கர்மம் இயற்ற செய்பவனும் சனியே. கதை வேறு.ஜோதிடம் வேறு. சனி எந்தவொரு சுபக்கிரக தொடர்போ பெறாதபோது ( வர்க்கசக்கரங்கள் உட்பட) எந்த நல்லவற்றையும் தராது. திருடன்,வஞ்சகன், மோசக்காரன்,நம்பவைத்து மோசம் செய்பவன்,தமோகுணம், தீயசெயல்கள், வறுமை,துன்பம், உழைக்கசெய்தல், கர்மம்( நற்கர்மம்,தீயமர்மம்) கீழ்நிலை,சாக்கடை,எச்சில்,உபயோகமற்றவை, அழுக்கு, தூய்மையற்ற இடம்,துரோகம், விதவை,கெட்டுப்போதல், அழிவு, நோய், தீராத துன்பம்,கடன்,மனித தன்மையற்ற செயல், கொடூரமாக தடந்துகொள்ளல் போன்ற அனைத்து தீயகாரகத்துவங்களும் சனியுடையது.சோம்பல், எந்த முயற்சியும் செய்யாமை தீயசனி தரும் பலன்களாகும். தன்னம்பிக்கையின்மையை பாவத்துவசனியே தருகிறது. எந்த செயல் செய்தாலும் பல இடையூறுகளையும்,காலதாமதத்தையும் பாவத்துவசனி வழங்கும். காலம்தவறுதல், நிகழ்ச்சிகளுக்கு தாமதமாக செல்லுதல், தாமதமாக சென்று பேருந்து,ரயில் போன்றவற்றை தவறவிட்டுவிட்டு வருந்துதல், காத்திருத்தல் சனியின் தீயசெயல்...

செல்வம் பெற்றிருந்தாலும் நாளடைவில் பொருளாதார காரியங்களில் சரிவுகளையும் , பிரச்சினைகளையும் தொடர்ந்து

குருவும்    புதனும் நெறியும் இரண்டில் பொன்னோன் நின்றிடப் புதனே  பார்க்கில் குறியுள தனமே நாசம் குருவுக்கு                 வஞ்சம் செய்வான் (இ-ள்)   ஜென்ம லக்கினத்திற்கு இரண்டில் குரு இருக்க குருவை புதன் பார்த்தால் ஜாதகரின் செல்வம் நாசமடையும் தன்னுடைய குருநாதர்களுக்கு துரோகம் செய்வர்கள். லக்கினம் மற்றும் ராசி எதுவாயினும் லக்கினத்திற்கு 2 - குரு - 2 - 6 - 8 - 10 -ஆம் வீடுகளில் ஒன்றில் புதன் லக்கினத்திற்கு 6 - குரு 2 - 6 - 10 - 12 - ஆம் வீடுகளில் ஒன்றில் புதன் லக்கினத்திற்கு 8 - குரு 2 - 4 - 8 - 12 - ஆம் வீடுகளில் ஒன்றில் புதன் லக்கினத்திற்கு 10 - ல் குரு 2 - 4 -6 10 - ஆம் வீடுகளில் ஒன்றில் புதன்     மேல்கண்ட அமைப்புடைய ஜாதகர் / ஜாதகியர் மற்ற யோக கிரக அமைப்பால் எவ்வளவுதான் செல்வம் பெற்றிருந்தாலும் நாளடைவில் பொருளாதார காரியங்களில் சரிவுகளையும் , பிரச்சினைகளையும் தொடர்ந்து எதிர்கொள்ளாக் கூடியாவார்கள்.

ஊதியத்தை நிர்ணயம் செய்யும் சூரியன்

ஊதியத்தை நிர்ணயம் செய்யும் சூரியன் ================================== சூரியனே ஊதிய காரகன் என்று அழைக்கப்படுகிறார் மாதம் ஒருமுறை ராசி விட்டு ராசி நகரும் சூரியன் ஊதியத்தை நிர்ணயம் செய்பவன் ஒருவருக்கு ஊதியத்தில் ஏதேனும் தடையோ அல்லது அதிருப்தி அல்லது உழைப்புக்கேற்ற ஊதியமும் இல்லாமல் இருந்தால் அவர்கள் ஜாதகத்தில் சூரியன் கெட்டிருக்கும். அதுபோலவே ஒருவருக்கு பதவி உயர்வுக்கு காரணமாக அமையும் கழகமும் சூரியனே ஆகும் சூரியன் ஒருவருடைய ஜாதகத்தில் குரு அல்லது அதனுடன் சம்பந்தப்பட்ட இருப்பின் அவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் எளிதில் கிட்டும். சூரியனுக்கு திரிகோணத்தில் ராகுவோ அல்லது கேதுவோ அல்லது சனியோ இருக்கும் பட்சத்தில் அவர்கள் எவ்வளவு உழைத்தாலும் அவர்களுக்கு ஊதிய உயர்வோ அல்லது பணி உயர்வு பதவி உயர்வு ஏற்படாது. அவ்வாறு ஏற்பட்டாலும் அது திருப்திகரமான நிலையில் இருக்காது. இதற்கு பரிகாரமாக சூரிய நமஸ்காரம் அதிகாலை பொழுதில் செய்து வருவது சிறந்த பலனை அளிக்கும்.